IPL 2024 துவக்க விழா...குதூகல படுத்த வரும் திரை நட்சத்திரங்களின் பட்டியல் இதோ..!

A R Rahman Cricket Akshay Kumar IPL 2024
By Karthick Mar 20, 2024 07:33 AM GMT
Report

 இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி துவங்கவுள்ளது.

IPL

கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது IPL தொடர். இந்த ஆண்டிற்கான IPL தொடரின் பாதி அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ipl-opening-ceremony-celebrity-performing

காரணம், நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தல். அதன் காரணமாக, மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டில் தான் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 22-ஆம் துவங்கும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், RCB அணியும் மோதுகின்றன.

RIP Hardik Pandya - ட்விட்டரில் முற்றும் மோதல் - சங்கடத்தில் MI அணி

RIP Hardik Pandya - ட்விட்டரில் முற்றும் மோதல் - சங்கடத்தில் MI அணி

ரசிகர்களுக்கு இப்போதே தொடர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உண்டாகியுள்ளது. இந்த முறையாவது RCB வெல்லுமா..? அல்லது மீண்டும் சென்னை - மும்பை அணிகளின் ஆதிக்கமே தொடரும் போன்ற பல கேள்விகள் இருக்கும் சூழலில், வீரர்கள் தீவிர வலைப்பயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நிகழ்ச்சி

இந்த ஆண்டு IPL தொடர் துவக்க நிகழ்ச்சிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 1 மணி நேரம் வரை நடைபெறவுள்ள துவக்க விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

ipl-opening-ceremony-celebrity-performing

இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் மற்றும் பாலிவுட் பாடகர் சோனு நிகாம் ஆகியோர் பங்கேற்கவுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.