கோவில் திருவிழா பேனரில் மியா கலிஃபா ஃபோட்டோ - காவல்துறை செய்த செயல்!

Kanchipuram Viral Photos
By Sumathi Aug 09, 2024 04:58 AM GMT
Report

கோவில் திருவிழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் மியா கலிஃபாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவில் திருவிழா

காஞ்சிபுரம், குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

temple banner

இங்கு வருடம் தோறும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மனுக்கும் ஊர் மக்கள் ஆடி மாதத்தின்போது பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஊர் முழுவதும் திருவிழா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஹனிமூனில் மியா கலிஃபாவால் சிக்கிய கணவர்.. நிகழ்ந்த சோகம்! நடந்தது என்ன?

ஹனிமூனில் மியா கலிஃபாவால் சிக்கிய கணவர்.. நிகழ்ந்த சோகம்! நடந்தது என்ன?

சர்ச்சை சம்பவம்

அதில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் புகைப்படங்கள், திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், பேனர் ஒன்றில் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிஃபா பால்குடம் தூக்குவது போல் சித்தரிக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இது பலரின் கவனம் ஈர்க்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து தகவல் தெரியவந்த நிலையில், போலீஸார் அங்குச் சென்று பேனரை அகற்றியுள்ளனர்.