பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுத்த கொடூரம் - பின்னணி என்ன?
பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு விஷம்
மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது மாணவர்கள் பலர் திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி விழுந்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதை அறிந்து பதறிப்போன மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகம் மயக்கமடைந்த 60 மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரபரப்பு
தொடர்ந்து, மருத்துவர்களின் பரிசோதனையில், அனைவருக்கும் விஷம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள வேறு 2 பள்ளிகளில் இதேபோல் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் போதை பொருள் கும்பல் இருக்கலாம் என மெக்சிகோ போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சிலர் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட அசுத்தமான குடிநீர் அல்லது உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து சியாபாஸ் மாகாண காவல்துறையினர் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.