பூஜையில் எனக்கு மரியாதை இல்லை..தீக்குளிக்க வந்த சட்டமன்ற உறுப்பினர் - சேலத்தில் பரபரப்பு!!
மேட்டூர் அணை 100 அடி எட்டியுள்ளதை அடுத்து நடத்தப்பட்ட பூஜையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேட்டூர்
சட்டமன்ற உறுப்பினர்' மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதாசிவம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து, தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 100 அடியை எட்டியுள்ளது.
இதற்காக, அப்பகுதியில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திற்கும் அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் வந்து கலந்து கொள்வதற்கு முன்பாகவே அப்பூஜை நடந்து முடிந்துள்ளது.
இது தனக்கு அளிக்கப்பட்ட மரியாதை குறைச்சலாகவே அவர் கருதியுள்ளார். சட்டமன்ற உறுப்பினருக்கு அளிக்கவில்லை என்பது அவருக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக, மேட்டூர் அணியின் நீர்ப்பாசன செயல் பொறியாளர் மற்றும் உதவி செயல் பொறியாளர் ஆகியோரை கண்டித்து மேட்டூர் - சேலம் பிரதான சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, மீண்டும் ஒரு முறை பூஜை நடத்தலாம் என கூற, ஆவேசமான சதாசிவம் "ஒரு பெண்ணிற்கு 2 முறை தாலிக்கட்ட முடியுமா? என வினவியுள்ளார்.
வாக்குவாதம் அதிகரிக்கவே, அதிகாரிகள் தனக்கு மரியாதை தருவதில்லை என குற்றசாட்டை வைக்கும் அவர், இது வரை நான் போலீஸ்க்காரர்களுக்கு எதாவது பிரச்சனை அளித்திருக்கிறேனா? என கேட்டார். ஒரு கட்டத்தில், நிதானமிழந்த அவர், நான் தீக்குளிக்கப்போகிறேன்,
இது குறித்து அய்யாவிடமும் கூறிவிட்டேன் என ஆதங்கமாக பேசினார். பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சமாதானம் பேசிய பிறகே, பரபரப்பு தனித்து பிரச்சனை ஒரு முடிவை எட்டியுள்ளது.