ஏனோ என் பின்னால் வர மக்கள் தயங்குகிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
பாமக கட்சி இன்று துவங்கப்பட்ட 36-வது வருடத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து தைலாபுரத தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் கொடி ஏற்றினார்.
தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, சமூக நீதி, சமுத்துவம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் பாமக 35 ஆண்டுகளை கடந்து 36-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வரும் பாமக ஏனோ மக்களுக்கு தெரிவதில்லை. பெரிய ஆதரவும் இல்லை. 35 ஆண்டுகளை கடந்து மக்களுக்காக போராடி வரும் சூழலில் மக்கள் பாமக என் பின்னால் வர தயங்குகிறார்கள்.
ஆனால், எதிர்காலத்தில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தகமாக பாமகவின் பின்னால் வரும் போது, ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும் என்றார். முன்னரே மின் கட்டண உயர்வு வரும் என நான் முன்னரே தெரிவித்திருந்தேன்.
தற்போது அறிவித்துளர்கள். தேர்தல் நேரத்தில் 1000, 2000 ரூபாய் என விலை கொடுத்து வாங்கினார்கள். இப்பொது , இந்த மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என பேசினார் ராமதாஸ்