விஜய்க்கு ஹீரோயினா நடிக்க வேண்டியது; அந்த பிரச்சனை, மாத்திரை.. - நடிகை காவேரி ஓபன் டாக்!
தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை காவேரி பேசியுள்ளார்.
நடிகை காவேரி
வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காவேரி. தொடர்ந்து உன்னை நான் வாழ்த்துகிறேன், பந்தயக் குதிரைகள்,போக்கிரி தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த ஒரு நிமிஷம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பஞ்சவர்ணக்கிளி, ஆனந்த பவன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த காவேரி மெட்டி ஒலி சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்தார்.
அந்த சீரியல் 811 எபிசோடுகள் ஓடியது. இதன் மூலம் மிகவும் பிரபலமடைந்த காவேரி, ருத்ரவீணை, அரசி, மலர்கள், கஸ்தூரி, தங்கம் என பல சீரியல்களில் நடித்தார். கடைசியாக வம்சம் சீரியலில் நடித்த காவேரி பின்னர் சீரியலில் இருந்து காணாமல் போனார்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு காவேரி பேசியதாவது "வம்சம் சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோதே எனது அம்மா இறந்துவிட்டார். நான் ரொம்பவே டிப்ரெஷனுக்கு சென்றுவிட்டேன்.
பேட்டி
தைராய்டு வேறு இருந்தது. அதனால் உடல் எடையும் கூடியது. சில மருந்துகள் கொடுத்தார்கள். அதை ஒரு மாதம் நிறுத்தியிருந்தேன். அந்த சமயத்தில் 8 கிலோ உடை குறைந்தேன். உடனே அந்த மருந்துகளை எடுப்பதை நிறுத்திவிட்டேன்.
வீட்டுக்குள்ளேயே இருக்கத்தான் எனக்கு பிடிக்கும். கிருஷ்ணகிரி பக்கத்தில் ஒரு பண்ணை வீட்டில் இருக்கிறோம். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். ஆனால் இங்கேயே ஒன்றரை வருடங்கள் தங்க வேண்டிய நிலை அமைந்துவிட்டது. சீரியல்களில் நடிக்க எனக்கு ஆசையில்லை. விஜய் சேதுபதி, நயன்தாரா, விஜய் ஆண்டனி, சமுத்திரகனி உள்ளிட்டோருடன் பணியாற்ற வேண்டும் என ஆசை.
எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எனது குடும்பமும் சினிமா குடும்பம்தான். ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பத்தில் விருப்பம் இல்லை. பிறகு எப்படியோ ஒத்துக்கொண்டார்கள். வைகாசி பொறந்தாச்சு படத்துக்கு பிறகு விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அது சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது" என்றார்.