விரைவில்..சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் சேவை - முக்கிய தகவல்
சேலம், திருச்சி, திருநெல்வேலியில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படவுள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னையை போல கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
விரைவில்..
இந்நிலையில் சேலம், திருச்சி மற்றும் நெல்லையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலியில் விரைவில் மெட்ரோ ரயில் செல்வதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.