மதுரைக்கு வருகிறது மெட்ரோ ரயில் திட்டம் - டெண்டர் வெளியீடு
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையை அடுத்து மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது.
இதற்கு முதற்கட்டமாக தற்போது இணையதளம் வாயிலாக மற்ற கட்டுமான நிறுவங்களிடம் இருந்து டெண்டர் கோரியுள்ளது.
மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் இரண்டு பிரிவுகளாக ( இரண்டு பாதைகள்) அதாவது, மதுரை, மாட்டுத்தாவணி , கூடல் நகர், விமான நிலையம், திருமங்கலம் வழியாக இந்த பாதைகள் வரைவு அமைக்கப்ட்டுள்ளன. சுமார் 31 கிமீ தொலைவுக்கு இந்த மெட்ரோ ரயில் பாதை வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட வரைவு அறிக்கையினை (செலவீனங்கள் உட்பட விரிவான அறிக்கை) தாக்கல் செய்யுமாறு இ-டெண்டர் (இணையதளம் வாயிலாக) சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மெட்ரோவுக்கான மொத்த பட்ஜெட் 8 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.