கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் கிடையாது; நிராகரித்த மத்திய அரசு - ஏன்?
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
மெட்ரோ ரயில்
கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியிருந்தது.

அதில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் 15 லட்சத்து 84 ஆயிரம் பேரும், மதுரையில் 15 லட்சம் பேரும் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு மறுப்பு
மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும்,

அங்கு பஸ் ராபிட் சிஸ்டம் போன்றவற்றை மட்டும் செயல்படுத்த முடியும் எனக்கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜக மாநிலம் ஆளும் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர்,
ஆக்ரா, மகாராஷ்டிராவின் நாக்பூர், புனே உள்ளிட்ட மக்கள் குறைவான சிறிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.