கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் - முதலமைச்சர்
கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிதியுதவி
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்க அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிசிக்சை பெற்று வருவோர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவத்திற்கு காரணமாக உள்ள அனைவரையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்
கள்ளச்சாராயம் விற்பனையை முழுமையாக தடுக்க தவறியவர்கள் மீது அரசு தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் 9 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளதாகவும், செங்கல்பட்டு மாவட்த்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயத்தில் மெத்தனாலை கலந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது என்றார்.
மேலும் கள்ளச்சாராயம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.