வானில் திடீரென பாய்ந்த விண்கல் - இரவை பகலாக்கிய அதிசயம்! வியக்க வைத்த காட்சி!
நீல ஒளியில் வானில் ராட்சத விண்கல் கடந்து சென்றதாக பல வீடீயோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
பயந்த விண்கல்
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான வானத்தில் ஒரு நீல ஒளி விண்கல் கடந்து செல்வது போன்றும், அந்த விண்கல்லிலிருந்து திடீரென வந்த வெளிச்சம் இரவை பகல் போன்று பிரகாசித்ததுமான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை சாலையில் காரில் சென்றவர்கள் சிலர் பார்வையில் பதிவான வகையில் இந்த வீடியோ பரவி வருகிறது. அதே போல போர்ச்சுகல் நாட்டில் உள்ள பின்ஹெய்ரோ அருகே இசைக்குழுவினரின் நிகழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த சமயத்தில் விண்கல் விழுந்தது.
அந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.இந்த அதிசய காட்சி காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. தற்போது இந்த பதிவை வெளியிட்ட பதிவர், “உண்மையற்றது!! போர்ச்சுகல் மீது பெரிய விண்கல் ஒளி! இப்படி ஒரு ஒளியை பார்ப்பது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு!
அதிச காட்சி
இது பூமியைத் தாக்கிய விண்கல்லாக மாறியதா என்பது குறித்து தெரியவில்லை. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தெரிந்தது. ஆஹா!” என உச்சகட்ட வியப்பில் குறிப்பிட்டு பதிவிட்டார்.இந்த நிலையில், நூற்றுக்கணக்கான கி.மீ. வரை இரவு நேர வானில் நீல நிற ஒளி பிரவாகம் பாய்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும், இது பூமியின் மேற்பரப்பைத் தாக்கியதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் இது போர்ச்சுகலின் காஸ்ட்ரோ டெய்ர் நகருக்கு அருகில் விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கூற்றுப்படி, "விண்கற்கள் அல்லது விண்வெளிப் பாறைகள் என்பது விண்வெளியில் உள்ள
பொருட்களாகும். அவை தூசிகள் முதல் சிறிய சிறுகோள்கள் வரை இருக்கும். இவை அதிக வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி எரிவதால் விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன” என கூறியுள்ளனர்.