ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய த்ரெட்ஸ்; 7மணி நேரத்தில் 10மில்லியன் பயனர்கள் - அப்படி என்ன இருக்கு?

Twitter Instagram
By Sumathi Jul 06, 2023 10:49 AM GMT
Report

இன்ஸ்டாகிராம் வாயிலாக ட்விட்டர் போன்ற த்ரெட்ஸ் என்ற தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

த்ரெட்ஸ்

மெட்டாவின் த்ரெட்ஸ் செயலி ஜூலை 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் பயனாளர்கள் தங்கள் பிளே ஸ்டோரில் இருந்து த்ரெட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய த்ரெட்ஸ்; 7மணி நேரத்தில் 10மில்லியன் பயனர்கள் - அப்படி என்ன இருக்கு? | Meta Launched Threads Against Twitter

ஆப் ஸ்டோர் தரவுகளின்படி, Threads என்பது Instagram இன் text அடிப்படையிலான ஒரு உரையாடல் செயலி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவுகள் 500 எழுத்துகள் வரை நீளமாக இருக்கலாம் மற்றும் 5 நிமிட நீளம் கொண்ட இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை அடங்கும்.

ட்விட்டருக்கு போட்டி

பதிவை வேறு எந்த தளத்திலும் இணைப்பாகப் பகிரலாம். இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள், த்ரெட்ஸ் செயலியை திறந்து அதில் இன்ஸ்டாவில் உள்நுழையக் கூடிய தகவல்களை கொடுத்தாலே போதும். இந்த செயலியைப் பயன்படுத்தலாம். இதற்கான தனி கணக்கு தேவைப்படாது.

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய த்ரெட்ஸ்; 7மணி நேரத்தில் 10மில்லியன் பயனர்கள் - அப்படி என்ன இருக்கு? | Meta Launched Threads Against Twitter

ட்விட்டர் வழங்கக்கூடிய சேவைகளும், அதில் இருந்து சில அம்சங்கள் கூடுதலாகவும் த்ரெட்ஸ் தளத்தில் இருக்கும் என மெட்டா உறுதி அளித்துள்ளது. இதனை, 7மணி நேரத்தில் சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தற்போது ட்விட்டர் மற்றும் த்ரெட்ஸ் குறித்த விமர்சனங்களும், மீம்களும் வான வேடிக்கையாய் வெடித்து வருகிறது.