கரை ஒதுங்கிய விசித்திர கடற்கன்னி? நிபுணர்கள் சொல்வது என்ன? நீடிக்கும் மர்மம்!
பப்புவா நியூ கினியா நாட்டில் கடற்கன்னியை போன்ற விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
கடற்கன்னி
பல கதைகளை மற்றும் திரைப்படங்களால் கேட்டு கடலுக்குள் கடல் கன்னி இருப்பதாக நம்மில் பலர் நம்புகின்றனர். இது போன்ற கடற்கன்னிகள் குறித்த தகவல்கள் நமக்கு எப்போது ஆச்சரியங்களை தரும். சில நேரங்களில் கடல் கன்னியை போன்ற புகைப்படங்களும் இணையங்களில் வைரலாகி வரும்.
ஆனால் அவை உண்மையா? அல்லது பொய்யா என்பது குறித்து தெரியாது. ஆனால் குழந்தைகளுக்கு கடற்கன்னிகளும், அவை மனிதர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவுவது போன்ற தகவல்களும் பிடித்தமானவை. அந்தவகையில் பப்புவா நியூ கினியா நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
நிபுணர்கள் கருத்து
இந்நிலையில் இத்தகைய உயிரினங்கள் "கிளாப்ஸ்டர்" (globster) என அழைக்கப்படுகிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த "கிளாப்ஸ்டர்" உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம்" என்று "லைவ் சைன்ஸ்" எனும் அறிவியல் வலைதளம் தெரிவித்துள்ளது.
இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் என்பதை தவிர வேறு எதுவும் சொல்வது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை ஒதுங்கியிருக்கும் "கிளாப்ஸ்டர்" கொண்டிருப்பதால், அனேகமாக இது ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.