வலையில் சிக்கிய 300 ஆண்டுகள் பழைமையான கடற்கன்னி வடிவில் மம்மி - சாகாவரம் தருமா கடற்கன்னி இறைச்சி? தீவிர சோதனை
அக்காலத்தில் எகிப்து நாட்டு கலாச்சாரத்தில் இறந்தவர்கள் உடல்களுக்கு சில சடங்குகள் செய்து பதப்படுத்தி வைப்பார்கள். அப்படி பதப்படுத்தி வைத்தால், இறந்தவர்களுக்கு மற்றொரு வாழ்க்கை உண்டு என்று எகிப்தியர்கள் கருதினார்கள்.
அப்படி இறந்த உடல்களை பதப்படுத்தி வைக்கும்போது, அதனுடன் தங்கம், வீட்டு விலங்குகள் ஆகியவற்றையும் சேர்த்துப் புதைத்து வைப்பார்கள். அப்படி அவர்கள் பதப்படுத்தி வைக்கப்படும் உடல்கள், காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், விலங்குகளின் மம்மிகளையும் உலகம் எங்கும் இருக்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனையடுத்து, தற்போது ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, சுமார் 300 ஆண்டுகள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி ஒன்று கிடைத்துள்ளது.
இது குறித்து, அந்த மீனவர்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த தொல்பொருள் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மம்மி பார்ப்பதற்கு கடல் கன்னி போல உள்ளது. இதன் நீளம் வெறும் 12 இன்ச். இந்த மம்மி 1736- 1741ம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த மம்மிக்கு, அதன் மேற்பகுதி கூர்மையான பற்கள், சற்று விகாரமான முகம், இரண்டு கைகள், தலையில் முடி புருவமுடன் கண்கள் என்று மனிதர்களை போன்று காட்சியளிக்கிறது.
குறிப்பாக மம்மியின் கீழ் பகுதியில் மீன்களை போல செதில்கள் மற்றும் வால் போல் குறுகிய முனை காணப்படுகிறது. சுருக்கமாக சொல்ல போனால் கடற்கன்னியை போல் காட்சி அளிக்கிறது. இது குறித்து இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.
ஓகாயாமா நாட்டுப்புற கழகத்தை சேர்ந்த ஹிரோஷி கினோஷிதா கூறுகையில், ஜப்பானைச் சேர்ந்த கடற்கன்னிகளுக்கு அழியா தன்மை உள்ளதாம். இதனால் அதன் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இறப்பே கிடையாது என்று சொல்கிறார்கள். இது போல் ஒரு பெண் கடற்கன்னியின் மாமிசத்தை சாப்பிட்ட ஒருவர் 800 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது என்றார்.