தனுசு ராசியில் நுழையும் புதன்.. புது வருடத்தில் இந்த ராசிகாரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ஜனவரி 4-ம் தேதி மதியம் 12:11 மணிக்கு புதன் தனுசு ராசிக்கு நுழைய உள்ளது.
ஜோதிடத்தில் ஒன்பது வகையான கிரகங்கள் உள்ளது. அதில் முக்கியமாக ஒன்றாக பார்க்கப்படுவது புதன் பகவான் . ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகர் கல்வி, வியாபாரம், நுண்ணறிவில் சிறந்து விளங்குவார். ஆனால் வலு குறைந்து இருந்தால் அவருக்கு அசுப பலன்கள் உண்டாகும்.
அந்த வகையில் ஜனவரி 4-ம் தேதி மதியம் 12:11 மணிக்கு புதன் தனுசு ராசிக்கு நுழைய உள்ளது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பகவானின் இடமாற்றம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதை உயரும். தம்பதியினரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக முடிவடையாமல் இருந்த பணிகள் விரைவில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். சமூகத்தில் நற்பெயர் ஏற்படும். வழக்குகள் ஏதேனும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் ஜனவரி 4-ம் தேதிக்குள் அதில் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்குஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோசம் பிறக்கும். சொந்த பெயரில் வீடு வாங்க நினைப்பவர்களின் கனவு விரைவில் நிறைவேறும். மேலும் சொத்து, வீடு, கார் வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.