வெடிக்கும் #MenToo பிரச்சாரம்; மனைவி டார்ச்சரால் ஐடி ஊழியர் மரணம் - என்ன நடந்தது?

Bengaluru Death
By Sumathi Dec 11, 2024 06:30 AM GMT
Report

மனைவி பணம் கேட்டு மிரட்டியதாக ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி ஊழியர் இறப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் அதுல். பெங்களூரு மரத்தஹல்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி நிகிதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

atul subhash

இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதி வைத்திருந்த 24 பக்க கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் தனது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த போலீஸார் விசாரணையில் அதுல் மீது அவரது மனைவி நிகிதா பல பொய் புகார்களை பதிவு செய்துள்ளார்.

அவற்றை திரும்ப பெற வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் தர வேண்டும் என மனைவி மற்றும் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். மேலும், தனது மகனை பார்க்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் மிரட்டியதாக தெரியவந்துள்ளது. இறப்பதற்கு முன் அதுல் வீடியோ ஒன்றையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தாயின் ரீல்ஸ் மோகம்.. நூலிழையில் உயிர் தப்பிய மகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

தாயின் ரீல்ஸ் மோகம்.. நூலிழையில் உயிர் தப்பிய மகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

#MenToo 

அதில் “என் மனைவி என் மீது ஒன்பது வழக்குகளை பதிவு செய்துள்ளார். ஆறு வழக்குகள் கீழ் நீதிமன்றத்திலும் மூன்று வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் உள்ளன. நான் சம்பாதிக்கும் பணம் என் எதிரிகளை பலப்படுத்துகிறது. எனவே, நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வது நல்லது.

ஏனென்றால், நான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதே பணம் என்னை அழிக்கவே பயன்படுத்தப்படும். இது ஓர் சுழற்சியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தன்னிடம் இருந்து ரூ.40 ஆயிரம் வரை ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகையாக பெறுகிறார்.

இது போதாது என்று மாதம் ரூ.4 லட்சம் கேட்கிறார்” என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது #JusticeForAtulSubhash மற்றும் #MenToo என்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவுகள் வைரலாகி வருகிறது.