அரசு மருத்துவமனை கழிவறை; மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சீரழித்த ஆம்புலன்ஸ் ஊழியர்!
மனநலம் பாதித்த பெண்ணை, ஆம்புலன்ஸ் பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராமநாதபுரம், திருவாடானை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனே அவரது தாயார் ஆம்புலன்ஸ் உதவியை நாடி, அதன்மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதன்பின், ஆம்புலன்ஸில் பணியாற்றிய மருத்துவ உதவியாளரான பாலமுருகன், மனநலம் பாதித்த பெண்ணையும்,
ஊழியர் கைது
அவரது தாயையும் ஆம்புலன்ஸில் இருந்து மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளார். அதனையடுத்து, அந்த பெண்ணின் தாயை அங்கேயே இருக்க கூறிய பாலமுருகன், பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் பதிவு செய்துவிட்டு வருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
சுமார் 1 மணி நேரத்திற்கு பின் அந்த பெண் மட்டும் வந்துள்ளார். அப்போது அவரை மருத்துவ பணியாளர்கள் பரிசோதித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
உடனே, இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் மருத்துவபணியாளர் பாலமுருகனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.