மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி - தூக்கிச்சென்று கொடூர செயலில் ஈடுபட்ட நபர்!
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
10 வயது சிறுமி
திருப்பத்தூர், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அழுதுக் கொண்டே வீடு சென்ற சிறுமி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பாலியல் வன்கொடுமை
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ராஜாவின் வீட்டிற்கு சென்று
அவரது மனைவியை வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டியுள்ளனர். தப்பியோடிய ராஜா கடந்த ஆண்டே தனது மகளையே பாலியல் வன்கொடுமை செய்து சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.