மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் கொடூரமாக எரித்து கொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்!

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மர்மநபர்கள் தலையுல் கல்லால் தாக்கி, எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையில் மயானம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடைத்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பல நாட்களாக சுற்றி திரிந்தவர் என்றும், பாலக்காட்டூரை சேர்ந்த உசேன் சேட்டு என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தலையில் கல்லை போட்டு, எரித்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.    

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்