மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? முடிவை சொன்ன உச்ச நீதிமன்றம்!
பணியிடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மாதவிடாய் விடுப்பு
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பணியிடங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொது நல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, "மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
தலையிட முடியாது
மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிப்பதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும். மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது.
அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கலாம்" என்று தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.