ஆண்களே...நம்பிக்கை இருக்கோ இல்லையோ...தப்பி தவறி கூட இதெல்லாம் செஞ்சிடாதீங்க..!
சாஸ்திரங்களின் படி பல வரைமுறைகள் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது.
சாஸ்திரம் சம்பிரதாயம்
முன்னோர்கள் வரையறுத்த பல சாஸ்திர சம்பிரதாயங்களில் பலதும் பிற்போக்கு தனமான ஒன்றாகவே உள்ளது. கணவன் இறந்தால் பெண்கள் சதி ஏறுவது, விதவை ஆகினால் வெள்ளை புடவை அணிவது என பல சாஸ்திர மூடத்தனமான விஷயங்கள் இருந்தன.
அதனை நாம் கலையறுத்துவிட்ட நிலையிலும், இன்னும் இது போன்ற பல மூடநம்பிக்கைகள் உள்ளன. இது பெண்களுக்கு மட்டும் தான் என்றால் அல்ல, ஆண்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றில் சில நாம் ஏற்றுக்கொள்ள கூடியவையே.
எடுத்துக்காட்டாக சபரிமலைக்கு விரதம் இருப்பதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. காலில் செருப்பு இல்லாமல் நடப்பது, காலை மாலை இருவேலை குளிப்பது, தலையில் இருமுடி கட்டி மலை ஏறுவது என பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவை நாம் உடலின் ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு உடையவை. அவற்றை கடைப்பிடிப்பதில் தவறில்லை.
அதே போல தான், சாஸ்திர சம்பிரதாயங்களின் படி சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றில் சில வற்றை தற்போது காணலாம். வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் ஆண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கவே கூடாது.
செஞ்சிடாதீங்க
அதே போல, வெள்ளிக்கிழமையன்று ஆண்கள் நிச்சயமாக கடன் வாங்க கூடாது. குளிக்காமல் ஆண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது. கோவில் புனிதமான இடம் என்ற காரணத்தால் பல இடங்களுக்கு சென்று வரும் ஆண்கள் நிச்சயமாக குளித்த பிறகே கோவில்களுக்கு செல்ல வேண்டும்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஆண்கள் தலை முடி வெட்டவே கூடாது என்ற நம்பிக்கையும் உள்ளது. அதே நேரங்களில் இறுதி சடங்குகளில் செல்வத்தையும் ஆண்கள் தவிர்த்திட வேண்டும்.
இதற்கு சில எமோஷனல் காரணங்கள் உள்ளன. இறப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு சென்று வந்தால் அது மனதளவில் ஆண்களை பாதிக்கும் போது, அது துணைக்கும் ஏற்படலாம். அது கருவில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பானது இல்லை என்ற காரணத்தால், அந்த வழக்கம் வேண்டாம் என கூறப்படுகிறது.