பிறந்தது 2024 - உங்க ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சாச்சு..? உங்களுக்கு என்ன பலன்..?
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அந்த ஆண்டில் நமது ராசிக்கான பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.
அப்படி இந்த வருடம் எந்தெந்த ராசிகளுக்கு எவ்வாறான பலன்கள் இருக்கிறது என்பதை தற்போது காணலாம்.
மேஷம்
ஆண்டின் துவக்கத்தில் மேஷத்தில் ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் - சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் - செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என கிரக அமைப்புகள் உள்ளன.
இதன் அடிப்படையில் இது ஏற்றமான ஆண்டாகவே அமையும். அலுவலகத்தில் சங்கடங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி மலரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம்
ஆண்டின் துவக்கத்தில் ராசிக்குப் ஐந்தாமிடத்தில் கேது, ஏழாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, எட்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பத்தாம் இடத்தில் சனி, பதினோராம் இடத்தில் ராகு என கிரக நிலவரங்கள் உள்ளன.
இதன் படி, முயற்சிகளுக்குப் பலன் தரும் வருடமாக இந்த ஆண்டு அமைகிறது. பணியில் உழைப்புக்கு உயர்வுகள் தேடி வரும். குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். வீடு, வாகனச் சேர்க்கையில் நிதானம் அவசியம்.
மிதுனம்
புத்தாண்டின் துவக்கத்தில் நான்காம் இடத்தில் கேது, ஆறாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் ராகு பதினோராம் இடத்தில் குரு, என்ற கிரக நிலை உள்ளன.
இதன்படி, இந்தாண்டு அமைதிக்குப் ஆனந்தத்தைத் தரக்கூடிய ஆண்டாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் படிப்படியாக பதவி உயர்வுகள் வரும். வீட்டில் விட்டுக்கொடுத்துப் போவது முக்கியம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
கடகம்
வருடத்தின் துவக்கத்தில் ராசிக்குப் மூன்றாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஆறாம் இடத்தில் சூரியன், செவ்வாய், எட்டாம் இடத்தில் சனி, ஒன்பதாம் இடத்தில் ராகு, பத்தாம் இடத்தில் குரு என கிரக நிலவரங்கள் உள்ளன.
இதன் அடிப்படையில் இந்த வருடம் வசந்தமான ஆண்டாக அமைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், எதிலும் சோம்பல் கூடாது. அலுவலகத்தில் அலட்சியமும் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும்.
சிம்மம்
புத்தாண்டின் துவக்கத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் புதன் சுக்ரன் - சேர்க்கை, ஐந்தாம் இடத்தில் சூரியன் - செவ்வாய், ஏழாம் இடத்தில் சனி, ஒன்பதாம் இடத்தில் சனி என கிரக நிலவரங்கள் உள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு தன்னம்பிக்கை பெருகும் ஆண்டாக அமையும். எந்த செயலையும் முழு முயற்சியோடு செய்வது நல்லது. குடும்பத்தில் கசப்பான சூழல் மறைந்து, வசந்தகாலம் வரத்தொடங்கும்சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும்.
கன்னி
புத்தாண்டின் துவக்கத்தில்ராசிக்கு மூன்றாம் இடத்தில் புதன் சுக்கிரன், நான்காம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு, எட்டாமிடத்தில் குரு, ஜன்ம ராசியில் கேது என கிரக நிலவரங்கள் உள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு முயற்சிகளுக்கு முன்னேற்றத்தைத் கொடுக்கும் ஆண்டாக அமையும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வீட்டில் நிம்மதி நிலவும். ஆனால், வார்த்தைகளில் நிதானமும், விட்டுக்கொடுத்து போவதும் வேண்டும்.
துலாம்
ஆண்டின் துவக்கத்தில் துலாம் ராசியில் இரண்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, மூன்றாம் இடத்தில் சூரியன் - செவ்வாய், ஐந்தாம் இடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு ஏழாம் இடத்தில் குரு, பன்னிரண்டாம் இடத்தில் கேது, என கிரக நிலவரங்கள் உள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளை தேடி வரும் ஆண்டாக அமையும். எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அலுவலகத்தில் அனுகூலமான சூழல் நிலவும். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச்சிதறல் கூடாது.
விருச்சிகம்
ஆண்டின் துவக்கத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், நான்காம் இடத்தில் சனி, ஐந்தாம் இடத்தில் ராகு, ஆறாமிடத்தில் குரு பதினோராம் இடத்தில் கேது, ஜன்மராசியில் புதன் சுக்ரன் சேர்க்கை என கிரக அமைப்புகள் உள்ளன.
அதன் அடிப்படையில், உயர்வுகளும் கிட்டும் ஆண்டாக அமையவுள்ளது. அலுவலகத்தில் தலைகனம் கூடாது. பணியிட விஷயங்களை பிறரிடம் பேசுவதைத் தவிருங்கள். வீட்டில் இனிய சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் கூடாது.
தனுசு
இந்த ஆண்டின் துவக்கத்தில் மூன்றாம் சனி, நான்காம் இடத்தில் ராகு, ஐந்தாம் இடத்தில் குரூ, பத்தாம் இடத்தில் கேது, பன்னிரண்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஜன்மராசியில் சூரியன் - செவ்வாய் என கிரக அமைப்புகள் உள்ளன.
அதன்படி, இது சற்று முன்னேற்றத்துக்கான தடை போடும் ஆண்டாக அமையலாம். அலுவலகத்தில் ஏற்றம் மாற்றம் என மாறி மாறி வரும். எந்தச் செயலையும் யோசித்து, திட்டமிட்டு செய்யுங்கள். குடும்பத்தில் வீண் பேச்சினைத் தவிர்ப்பது நல்லது. பணவரவை சேமிக்கப் பழகுங்கள்.
மகரம்
வருடத்தின் துவக்கத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி, மூன்றாம் இடத்தில் ராகு, நான்காம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் கேது, பதினோராம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் - செவ்வாய், என கிரக அமைப்புகள் உள்ளன.
இதன் படி, இந்தாண்டு நன்மைகளைத் தரக்கூடிய ஆண்டாகவே அமையும். ஆனால் பேச்சில் நிதானம் முக்கியம். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவே நல்லது.
கும்பம்
வருடத்தின் துவக்கத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு, மூன்றாம் இடத்தில் குரு, எட்டாம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பதினோராம் இடத்தில் சூரியன் செவ்வாய், உங்கள் ஜன்ம ராசியான கும்பத்தில் சனி, என கிரக நிலைகள் உள்ளன.
இதன் படி, இந்த ஆண்டு உயர்வுகளையும் தரக்கூடியதாக அமையும். ஆனாலும் செய்யும் வேலையில் தன்னம்பிக்கை மிகமிக அவசியம். பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரும். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசுவது, செய்வது கூடாது. மனம்போல திருமண பந்தம் கைகூடும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
புத்தாண்டின் துவக்கத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, ஏழாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பத்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய், பன்னிரண்டாம் இடத்தில் சனி, உங்கள் ஜன்ம ராசியான மீனத்தில் ராகு என கிரக நிலை உள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு நன்மைகளை அதிக அளவில் அளிக்கும் ஆண்டாகவே அமையும். ஆனால் பணியில் சோம்பல் வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் முக்கியம். பணத்தைக் கையாளுவதில் கவனம் முக்கியம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.