ஆம்பளைங்களுக்கு no entry..!! பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்..!!அப்ப குழந்தைங்க எப்படி..?

Kenya
By Karthick Oct 10, 2023 10:30 AM GMT
Report

ஆண்களுக்கு இடமே இல்லாமல் பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம் ஒன்று இந்த உலகத்தில் உள்ளது என்றால் அதனை உங்களால் நம்ப முடியுமா..? அப்படி ஒரு கிராமத்தை பற்றி தற்போது காணலாம் வாருங்கள்.

பெண்கள் மட்டுமே வாழும் கிராமம்

பெண்கள் இல்லாத உலகத்தை யோசித்து பார்க்கும் படி பல படங்களில் நாம் கேட்டிருப்போம். ஆனால் ஆண்களுக்கு அனுமதி இல்லாத கிராமம் ஒன்று உண்மையில் உள்ளது. அந்த கிராமம் கென்ய நாட்டில் உள்ளது. உமோஜா என்ற அழைக்கப்படும் இந்த கிராமத்தில் வெறும் பெண்கள் மட்டும் குழந்தைகள் மட்டுமே வசிக்கின்றனர்.

men-not-allowed-women-only-living-village

இந்த அதிசய வழக்கத்தை கொண்ட உமோஜா கிராமம் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

சொன்னபடியே நடக்குது; வெடிக்கும் போர், அன்றே கனித்த பாபா வாங்கா - அப்போ அந்த 3ம் உலக போர்?

சொன்னபடியே நடக்குது; வெடிக்கும் போர், அன்றே கனித்த பாபா வாங்கா - அப்போ அந்த 3ம் உலக போர்?

ஏன் இந்த விசித்திர வழக்கம்

இந்த விசித்திர பழக்கம் எதனால் என்றும் நம்மில் பலருக்கும் கேள்விகள் எழலாம். முன்னர் இந்த சமூகத்தில் பெண்கள் ஆண்களின் சொத்துக்களாக கருதப்பட்டுள்ளார். ஆனால் அவர்களுக்கென பெரிய உரிமைகள் ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

men-not-allowed-women-only-living-village

சொத்து மற்றும் விலங்கு உரிமை ஏதும் இல்லாத நிலையில், பல பெண்கள் குடும்ப பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு திருமண செய்யப்படுவது போன்ற பல இன்னல்களை சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பிரிட்டிஷ் காலனியாகத்தில் கென்யா நாடு இருந்த போது, 1990-களில் இந்த இனப் பெண்கள் பிரிட்டிஷ் வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அப்பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளார்.

men-not-allowed-women-only-living-village

சுமார் 1400 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சிக்குரிய தகவல் கூறப்படுகிறது. அப்போது இந்த கொடுமைகளுக்கு ஆளான ரெபெக்கா லோலோசோலி என்ற பெண் அப்போது தன்னை போலவே பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட 15 பெண்களை ஒன்று திரட்டி இந்த உமோஜா கிராமத்தை நிறுவினார். இன்று இந்த கிராமத்தில் 40 குடும்பங்கள் உள்ளன.

men-not-allowed-women-only-living-village

இந்த கிராமத்தின் முக்கிய தொழிலாக பெண்கள் பாரம்பரிய மணி மாலைகளை பணம் சம்பாதிக்கிறார்கள். கிராம நிர்வாகத்தை அவர்களே நிர்வகிக்கிறார்கள். ஆண்களே இல்லை என்ற போதிலும் எவ்வாறு குழந்தைகள் என்ற கேள்வி வந்தால், இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கிராமத்தை விட்டு வெளியேறி மற்ற ஆண்களுடன் உறவு கொண்டு கர்ப்பம் தரிக்கிறார்கள்.