பெண்களாக மாறும் ஆண்கள் .. 232 ஆண்டுகளாக நள்ளிரவில் நடக்கும் வினோத பூஜை!

Pooja India Parigarangal West Bengal
By Vidhya Senthil Nov 19, 2024 12:23 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  232 ஆண்டுகளாகப் பெண் வேடமணிந்து ஆண்கள் செய்யும் பூஜை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் கார்த்திகை மாதத்தில் துர்கா பூஜை, லட்சுமி மற்றும் காளி பூஜைக்குப் பிறகு கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஜகதாத்ரி பூஜை. ஜகதாத்ரி என்ற பெயரில் துர்கா தேவியின் மறு அவதாரம் என்று கூறப்படுகிறது. கடந்த 232 ஆண்டுகளாகப் பெண் வேடமணிந்து ஆண்கள் பூஜை செய்து வருகின்றனர்.

Men dressed as women perform puja

இது குறித்து நடத்தப்பட்ட வரலாறு ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வெளிநாட்டவர்கள் பத்ரேஸ்வர் கௌர்ஹாத்தி பகுதியை ஆக்கிரமித்து இருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறச் வரமுடியாத சுழல் இருந்து வந்தது.

கோவில் கருவறையில் அமர்ந்து அருந்திய பூசாரி - வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்!

கோவில் கருவறையில் அமர்ந்து அருந்திய பூசாரி - வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்!

  வினோத பூஜை

இதனால் ஜகதாத்ரி அம்மனுக்குப் பூஜை செய்ய ஆண்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர். இதனால் தங்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்கள் வீட்டிற்குள் கடவுளை எப்படி வரவேற்பார்களோ அதைப்போலவே ஆண்களும் வரவேற்க ஆரம்பித்தனர்.

west bengal durga pooja

பெண்களைப் போல அவர்கள் புடவை கட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமம் பூசி இன்று வரை அவர்கள் கடவுளை வணங்கி வருகின்றனர். அதன் பிறகு இது ஒரு பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலுக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது.