இங்கு ஒவ்வொரு வீட்டின் செல்லப்பிராணிகளே பாம்புதான் - எங்கு தெரியுமா?
பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் கிராமம் குறித்து பார்ப்போம்.
செல்லப்பிராணி
புனேவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஷெட்பால். இங்கு ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் இருக்கும். கிராம மக்களின் படுக்கையறைகளிலும் கூட சகஜமாக காணப்படுகின்றன.
இந்த மக்கள் பாம்புகளை வழிபடுவது மட்டுமின்றி, அவற்றுக்காக தங்கள் வீடுகளில் பிரத்யேக அறையை உருவாக்கி வைத்துள்ளனர். அங்கு பாம்புகள் சிவனின் அடையாளம் என்று நம்புகின்றனர்.
பிரத்யேக அறை
எனவே அவற்றை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதுகின்றனர். இந்த கிராமத்தில் புதிதாக வீடு கட்டும் போதெல்லாம் அதில் நாகப்பாம்புகளுக்கு இடம் ஒதுக்குகின்றனர்.
அந்த சிறப்பு பகுதியை ’தேவஸ்தானம்’ என அழைக்கின்றனர். பாம்புகளும் மனிதர்களை போன்ற ஒரு உயிரினம் தான். அவை மக்களிடம் இருந்து அன்பையும் மரியாதையையும் பெற விரும்புவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.