ஆண் பெண் சேர்ந்து ஒரே வாகனத்தில் செல்லக்கூடாது - அரசு அதிரடி உத்தரவு!

Indonesia World
By Vinothini Aug 12, 2023 06:15 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 ஒரே வாகனத்தில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து செல்ல அரசு தடை விதித்துள்ளது.

இஸ்லாமிய நாடு

இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் மேற்கு மூலையில் ஆச்சே என்ற மாகாணம் உள்ளது. உலகில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு இஸ்லாமிய மக்கள் மிகவம் கட்டுக்கோப்பாக இருப்பர், இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் நடைமுரையில் உள்ள உலக புகழ்பெற்ற இடம்.

men-and-women-should-not-go-in-bike

இங்கு சூதாட்டம், மது அருந்துவது, திருமணத்துக்கு அப்பாலான உறவு போன்ற விஷயங்களுக்கு தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடி வழங்கும் சட்டங்கள் அங்கு உள்ளது.

அரசு உத்தரவு

இந்நிலையில், தற்போது திருமணம் மற்றும் குடும்ப உறவுக்குள் வராத ஆண் - பெண் ஆகியோர் ஒன்றாக வாகனப் பயணம் செய்வதற்கான தடையும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஆணும் பெண்ணும் தங்கள் வாகனத்தில் தனித்தனியாகவே மேற்கொள்ள வேண்டும்.

men-and-women-should-not-go-in-bike

இதன் மூலம் வாகனங்களில் நெருக்கமாக செல்லும் ஜோடிகளை கட்டுப்படுத்த இயலும் என ஆச்சே மாகாணம் முடிவெடுத்துள்ளது. இஸ்லாமிய மதகுருக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆச்சே மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இந்த விதிமுறை ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தினது வந்தது தற்பொழுது மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.