கோவிலுக்குள் செல்ல மறுப்பு; பட்டியலின மக்கள் தீ குளிக்க முயற்சி - பரபரப்பு!
விழுப்புரத்தில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் செல்ல மறுத்ததால் அவர்கள் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலின மக்கள்
விழுப்புரம் மாவட்டம், அடுத்து மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் செல்ல அனுமதி இல்லை.
இதனால் கடந்த மாதம் கோயில் திருவிழாவின் போது இளைஞர் சிலர் கோயிலுக்குள் சென்றதால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதன் காரணமாக பட்டியலின மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வளவனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி, பட்டயலின மக்கள் கோயிலுக்கு செல்வதை தடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்படும் என கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தற்போது மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் முன்பாக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் கோயில் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த மக்களிடம், வருவாய் கோட்டாச்சியர் பேசி கொண்டிருந்த போது திடீர் என மூவர் உடலின் மீது மண்ணென்னையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் தடுத்து அவர்களை மீட்டு சென்றனர், இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.