சுழன்றடித்த புயல்; உயிரை பணயம் வைத்த விமானப்படை வீரர்கள் - சிலிர்க்கவைக்கும் வீடியோ
புயல் வானில் எப்படி உள்ளது என்பது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
‛மெலிசா' புயல்
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‛மொந்தா’ புயல் இன்று இரவில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டணம் மற்றும் காக்கிநாடா இடையே கரையைக் கடக்கவுள்ளது.

இதற்கிடையில், ‛மெலிசா' என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த புயல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். ஹைதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் விமானப்படை விமானம் வானில் ‛மெலிசா' புயல் எப்படி உள்ளது? என்பதை வீடியோவாக எடுத்துள்ளது.
This footage from inside the eye of Category 5 Hurricane Melissa might be the most jaw-dropping video ever captured of a hurricane’s eye, showcasing the infamous “stadium effect." pic.twitter.com/AEhj2g2Ban
— Colin McCarthy (@US_Stormwatch) October 27, 2025
அதில் மேகக்கூட்டங்கள் வெள்ளை நிறத்தில் வேகமாக நகர்கின்றன. அதோடு மேகக்கூட்டங்கள் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் சுழல்கின்றன. மேலும் பேரிரைச்சல் கேட்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.