வெறும் ஒரு ரூபாய்க்கு விமான பயணம் - முன்பதிவு செய்வது எப்படி?
இண்டிகோ ஒரு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 'Infant Fly at Rs.1' என்ற பெயரில், 0-24 மாத குழந்தைகள் வெறும் 1 ரூபாயில் பயணிக்கலாம்.

இந்த சலுகை நவம்பர் 30, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் முதல் 2 வயது (24 மாதங்கள்) வரையிலான குழந்தைகள் தகுதியானவர்கள்.
சிறப்பு சலுகை
செக்-இன் போது வயதுச் சான்றிதழ்களை காட்ட வேண்டும். பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை ஏற்கப்படும். இல்லையெனில் முழு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த சலுகை இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான (goIndiGo.in) மூலம் மட்டுமே கிடைக்கும். ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
ஏர்பஸ் A320: அதிகபட்சம் 12 குழந்தைகள். ATR விமானங்கள்: அதிகபட்சம் 6 குழந்தைகள்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil