மேகன் மிகவும் மோசமானவர்.. முன்னாள் அதிபர் ட்ரம்பின் சர்ச்சையான கருத்து!

trump usa us meghan
By Jon Mar 16, 2021 11:45 AM GMT
Report

மேகன் நல்லவர் இல்லை என்று நான் ஏற்கனவே சொன்னேன், அதை இப்போது எல்லோருமே கண்கூடாக பார்க்கிறார்கள் என முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே மேகன் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தபோது அவரை விமர்சித்திருந்தார் ட்ரம்ப். நான் மேகனுடைய ரசிகன் அல்ல என்று கூறிய ட்ரம்ப், ஹரிக்கு ஏராளம் அதிர்ஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறேன், காரணம் அது அவருக்கு தேவைப்படும் என்றும் கூறியிருந்தார் அவர். தர்போது, ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகரான Jason Miller, புதிதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

மேகன் மிகவும் மோசமானவர்.. முன்னாள் அதிபர் ட்ரம்பின் சர்ச்சையான கருத்து! | Meghan Markle Controversial Former President Trump

மேகன் மோசமானவர், அவர் நல்லவரில்லை அல்லது ஒன்றுக்கும் உதவாதவர் என்ற பொருளில் ’Meghan's no good’ என்று கூறினாராம் ட்ரம்ப். இது குறித்து ஒரு செய்தியையே உருவாக்கலாம், ஆனால் அது நல்ல ஐடியா அல்ல என்று கருதுகிறாராம் ட்ரம்ப்.

ஏனென்றால், மேகனைக் குறித்து நீங்கள் ஏதாவது நெகட்டிவாக கூறிவிட்டால், நம்மை ஒதுக்கிவிடுவார்கள், பயர்ஸ் மார்கனைப் பாருங்கள், அவருக்கு அப்படிதான் நேர்ந்தது என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.

மேகன் மிகவும் மோசமானவர்.. முன்னாள் அதிபர் ட்ரம்பின் சர்ச்சையான கருத்து! | Meghan Markle Controversial Former President Trump

Good Morning Britain என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக பணியாற்றிய மார்கன், ஹரி மேகன் பேட்டியின்போது, மேகன் கூறிய ஒரு வார்த்தையைக் கூட தான் நம்பவில்லை என்று கூற, அதற்கு கடும் விமர்சனம் எழவே, தொலைக்காட்சியிலிருந்தே வெளிநடப்பு செய்துவிட்டார். ஆக, மேகனைக் குறித்து பேசினால் நமக்கும் தொல்லைதான், நமக்கு எதற்கு வம்பு என்பது போல பேசியிருக்கிறார் ட்ரம்ப்!


Gallery