தமிழ்நாட்டிற்கு நெருக்கடி - அனைத்து ஏற்பாடுகளும் தயார் - மேகதாது விவகாரம் - உறுதியாக நிற்கும் சித்தராமையா
இன்று தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில பட்ஜெட்டில் காவிரி ஆற்றில் மேகதாது அணைஅணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என மாநில முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஏற்பாடுகள்
இன்று 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான கர்நாடக மாநில பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தங்கள் கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் என தெரிவித்தார்.
மேலும், அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை போன்றவற்றை அடையாளப்படுத்தும் பணியும் நிறைவு பெற்றுள்ளதாக அவர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட நீண்ட காலமாகவே கர்நாடக அரசு முயன்று வரும் சூழலில் அதனை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட மேகதாது அணை கட்டப்படும் என உறுதிபட வாக்குறுதி அளித்திருந்தது கர்நாடக காங்கிரஸ் கட்சி.