குளிக்குறதுக்கும் அந்த தண்ணி தான் வேண்டும் - கண்டிஷன் போட்டு தயாரிப்பாளரை அலறவிட்ட மீரா!! போட்டுடைந்த இயக்குனர்
நடிகைகள் நடித்து கொண்டிருக்கும் போது வித்தியாசமான நிபந்தனைகளை வைப்பதை நாம் கேட்டே வருகிறோம்.
மீரா சோப்ரா
எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் மீரா. அப்படம் கொடுத்த வெற்றி அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார்.
பிரஷாந்துடன் ஜாம்பவான், சிபியுடன் லீ, அர்ஜூனுடன் மருதமலை என வரிசையாக நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார்.
பிறகு பட வாய்ப்புகள் சினிமாவில் இருந்து முற்றிலும் காணாமல் போனார் மீரா சோப்ரா. இவருக்கு அண்மையில் திருமணமும் நடந்து முடிந்திருந்தது. இவரை குறித்து இயக்குனர் எழில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளன.
கண்டிஷன்
அதாவது, பிரசாந்தின் ஜாம்பவான் பட ஷூட்டிங் குற்றாலத்தில் நடைபெற்று கொண்டிருந்ததாம். அப்போது, ஒருநாள் குற்றாலம் அருவி கீழே 12 ஆயிரம் லிட்டர் டாங்க் இருந்ததாம். அதில் தண்ணீரை நிரப்பி, அதில் அவர் குளிக்கும் காட்சி எடுக்க வேண்டியிருந்ததாம்.
ஆனால், இந்த தண்ணில எல்லாம் குளிக்கமாட்டேன் என்று மினரல் வாட்டர் தான் வேணும் என்று நிரப்ப சொன்னாங்க மீரா சோப்ரா. அவர் தயாரிப்பாளரிடம் சொல்லியும் முடியாது என்று கூறினோம்.
உடனே மீரா நடிக்கமாட்டேன் என்று கோவித்துக்கொண்டு ஷூட்டிங்கை விட்டு சென்றுவிட்டார். இதனை இயக்குனர் எழில் காமெடியாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.