மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ருத்ரா அபிஷேகம் -எப்போது தெரியுமா?
செப்டம்பர் 20 ஆம் தேதி சுந்தரேஸ்வரர் மீனாட்சி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம் நடைபெற இருப்பதாக திருக்கோவிலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன்
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில். இந்த தலத்தினை பூலோக கைலாசம் என்றும் சொல்வார்கள். இந்த கோவிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் அருள்பாளிக்கிறார். அம்பிகையை மீனாட்சியம்மனை மீனாட்சி அம்மன் என்றும் அழைப்பர்.
இந்த கோவிலில் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. சுவாமி சன்னதி நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோயில்களைப் போன்று இல்லாமல் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி நடனம்ஆடுகிறார்.
மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கே பிறந்தாலும் புண்ணியம், அம்மனை நினைத்தாலும் புண்ணியம். இத்தனை சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி மூலத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ருத்ரா அபிஷேகம் என்றால் என்ன?
அதன் ஒருபகுதியாக வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சுந்தரேஸ்வரர் மீனாட்சி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம் நடைபெற இருப்பதாக திருக்கோவிலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 12 மணிக்குள் விக்னேஸ்வரர் பூஜை 108 கலச பூஜை உள்ளிட்டவை நடத்தப்படும்.
அதேபோல் மாலை 6.15 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாரதனை, பிரசாதம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருத்ரா அபிஷேகம் என்றால் என்ன? ருத்ரா அபிஷேகம் என்பது சிவபெருமானுக்கு செய்யப்படும் முக்கிய பூஜை ஆகும் . சிவபெருமானுக்கு ருத்ர அபிஷேகம் செய்து, பூஜை செய்து, பக்தர்களின் பாவங்களை நீக்கி, சாந்தியை அடைவதன் மூலம் அவரை மகிழ்விக்க கூடியதாக இந்த பூஜை உள்ளது.