மீனாட்சி அம்மன் கோவில் முதல் திருபரங்குன்றம் வரை மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்கள்..!
மதுரை மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில் தான் நினைவுக்கு வரும். சுமார் 2500 வருடங்களுக்கு பழமையானதாக கருதப்படும் மதுரை நகரம்.
15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் 4,500 துாண்கள் மற்றும் 8 கோபுரங்களையும் கொண்டுள்ளது.
இந்த கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு மண்டபமும் வேறுபட்ட மிக அழகிய நுணுக்கங்களோடு கொண்ட தனி சிறப்புகளையும் கொண்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 7 இசைத் துாண்கள் ஆகியவை உள்ளனர்.
இந்த கோவிலின் சிறப்புகளையும், வரலாற்றையும் அறிந்து கொள்ள வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
காந்தி அருங்காட்சியகம்
மதுரையில் இருந்து மேலுார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது காந்தி அருங்காட்சியகம்.
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள், அவரின் நினைவு சின்னங்கள் என பல அரிய பொருள்களை இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இந்த அருங்காட்சியகம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்று இந்த இடம்.
திருமலை நாயகர் மஹால்
மதுரையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று திருமலை நாயக்கர் மஹால். நாயக்கர்களின் அழகிய கட்டிடக் கலையை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த மஹால் காட்சியளிக்கிறது.
திருமலை நாயக்கர் மஹால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பின்புறத்தில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ளது.
இந்த மஹால் 58 அடி உயரமுமம், 248 பெரிய பிரம்மாண்டமான துாண்களும் கொண்ட இந்த மாளிகை மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாக அமைந்துள்ளது.
அழகர் கோவில்
அழகர் கோவில் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும். இங்கு விஷ்ணுவை வழிபடுபவர்கள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
விஷ்ணு பகவான் ஓய்வு எடுக்கும் தலம் என்று இது நம்பப்படுகிறது.இது அழகர் மலையில் அமைந்துள்ளது.
விஷ்ணுவின் பல அவதாரங்களை சிலையாக வடிவமைக்கப்பட்டு இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
வைகை அணை
சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்று வைகை அணை. இந்த அணையை பார்வையிடுவதற்கான பார்வை நேரம் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது வைகை அணை இந்த அணை தேனி மாவட்டத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பழமுதிர் சோலை
மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பழமுதிர் சோலை கோவில். மருகபெருமானின் கோவில்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருகிறது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அதிகளவிலான மக்கள் செல்கின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்று இந்த திருப்பரங்குன்றம் கோவில். மதுரையில் இருந்து தெற்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் தான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.