அவருடன் முத்த காட்சிக்கு தயாராக சொன்ன இயக்குநர் - அம்மாவிடம் கதறி அழுத மீனா!
இயக்குநர் முத்தக் காட்சிக்கு தயாராக கூறியபோது மீனா தனது தாயிடம் அழுதுள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
நைனிகா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு மீனாவின் கணவர் உயிரிழந்தார். அதன்பின், நடிகை மீனா மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
முத்த காட்சி
"கமல் ஹாசன் படம் என்றதும் அவர் பெரிய லெஜெண்ட் என்றுதான் எனது நினைவுக்கு வந்தது. அதனால்தான் நடிக்கவும் ஒத்துக்கொண்டேன். கிஸ் சீன் பற்றியெல்லாம் எனது நியாபகத்திலேயே இல்லை. படத்தின் ஒரு சீன் எடுத்தார். அதாவது கமல்ஹாசன் வந்து என்னை கிஸ் கொடுப்பது போன்ற சீன் அது.
உடனே நான் அச்சச்சோ இதை நான் யோசிக்கவே இல்லையே என நினைத்துக்கொண்டு எனது அம்மாவிடம் சென்று, மீனா அப்படி பண்ணமாட்டா என்று டைரக்டர்ட்ட நீங்களே சொல்லுங்கள் என்று கூறி அழுதேன். அந்த சமயத்தில் ஷாட் ரெடி என இயக்குந்ர் குரல் கொடுத்துவிட்டார்.
அதனையடுத்து, பதறிப்போய் நான் நின்றவுடன் இங்கே படுங்கள் என்று சொன்னார். தொடர்ந்து கமல் ஹாசனிடம் நீங்கள் கிஸ் கொடுப்பது போல் பக்கத்தில் செல்ல வேண்டும். அதனையடுத்து இப்போது வேண்டாமே என சொல்லும்படி காட்சி என்றார்.
அதனையடுத்து கமலும் நெருங்கி வந்து இப்போது வேண்டாமே என சொன்னார். டேக் ஓகே ஆனதும் துள்ளி குதித்து எழுந்துவிட்டேன். ஒருவேளை கிஸ் சீன் எடுத்திருந்தால் அதற்கு முன்னதாகவே இயக்குநரிம் நானே முடியாது என்று சொல்ல நினைத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.