மறுமணம் குறித்து வெளியான வதந்திகள் - ஒரே பதிலால் வாயடைத்து போகவைத்த மீனா
மீனா
90-களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் மீனா. மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவரும் இன்னும் சில வருடங்களிலேயே நாயகி ஆகிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.
அப்படி இருக்கும் நிலையில், இன்றளவும் மீனா மீதான grace குறையவில்லை. துணை கதாபாத்திரங்களில் தற்போது அசத்தி வருகிறார் மீனா. நாயகியாக நடித்த போது, தென்னிந்தியாவின் அனைத்து மொழி அநேக நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்ட மீனா, தற்போது மகள் வளர்ப்பில் அதீத கவனம் எடுத்துக்கொண்டுள்ளார்.
கணவர் மறைவுக்கு பிறகு, தொடர்ந்து மீனா மற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. மறுமணம் செய்வதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதனை அவதூறாக பிறர் வெளியில் பேசுவது கண்டிக்கத்தக்கதே.
மருமணமா?
ஆனால், இன்றைய சமூகவலைதளகாலத்தில் இது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. யாரோ எங்கோ அமர்ந்து கொண்டு ஒருவரை குறித்து பேசுவது வழக்கமாகி போயுள்ளது. சில நாட்களாக மீனம் பிரபல நடிகர் ஒருவர்தான் பழகி வருவதாகவும், அவர்கள் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் அதிகளவில் தென்பட்டன.
இந்த நிலையில் தான், அவ்வாறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,
வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன,
முட்டாள்களால் பரப்பப்பட்டது,
மற்றும் முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Rumors are created by haters,
— Meena (@ActressMeena_) July 18, 2024
spread by fools,
and accepted by idiots ?#Meena pic.twitter.com/DI8ieqGLVB
இவ்வாறு மீனா குறிப்பிட்டுள்ளார்.