நா மட்டுமில்ல...நைனிகாவும் சொல்லணும் - இரண்டாவது கல்யாணம்..? யோசனையில் மீனா..?
மீனா இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வதை விட தனக்கு இது தான் முக்கியம் என நடிகை மீனா பேட்டி தெரிவித்துள்ளார்.
மீனா
தென்னிந்தியாவில் 90-களில் மிகவும் பிரபலமாக முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்த மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் மகள் நைனிகா விஜயின் "தெறி" படத்தில் அறிமுகமானதும், வித்யாசாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மறைந்ததும் அனைவரும் அறிந்ததே. வித்யாசாகரின் மறைவிற்கு பிறகு மீனா மறுமண செய்துகொள்வாரா..? என்ற கேள்விகள் பல தரப்பிலும் எழுப்பப்பட்டது.
இரண்டாவது திருமணம்.?
இந்நிலையில், அது குறித்து மீனா பேட்டி ஒன்றில் மனந்திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது மறைவை ஈடு செய்ய முடியவில்லை என்ற மீனா ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாவதாகவும் கூறினார்.

அப்படியான வதந்திகள் தன்னை மட்டுமன்றி குடும்பத்தினரையும் பாதிப்பதாகவும் குறிப்பிட்ட மீனா, தற்போது தன்னுடைய மறுமணம் குறித்து தான் யோசிக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

எனக்கு ஒரு மகள் உள்ள சூழலில் தன்னுடைய மறுமணம் அவரையும் சார்ந்தது என்றும் மீனா தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், மகள் நைனிகா தான்முழு கவனம் என்று கூறிய மீனா, தற்போதைக்கு இரண்டாவது திருமணம் குறித்து எந்த யோசனை இல்லை என்றும் மகள் இருக்கும் சூழலில் மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil