அவர் மேலதான் ஆசைப்பட்டேன்; இதயமே நொறுங்கிட்டு - வெளிப்படையாய் சொன்ன மீனா!

Meena Bollywood Hrithik Roshan
By Sumathi Aug 22, 2023 06:36 AM GMT
Report

பிரபல நடிகர் மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக மீனா தெரிவித்துள்ளார்.

நடிகை மீனா

90-களில் ரசிர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவையே கலக்கியவர். நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அவர் மேலதான் ஆசைப்பட்டேன்; இதயமே நொறுங்கிட்டு - வெளிப்படையாய் சொன்ன மீனா! | Meena Open Talks Crush On Bollywood Hero

பிறகு, அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, ரஜினிக்கே ஜோடியாக நடித்தார். கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

நடிகர் மீது ஆசை

இதற்கிடையில், பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை 2009-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் நைனிகா 5 வயதில் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றார்.

அவர் மேலதான் ஆசைப்பட்டேன்; இதயமே நொறுங்கிட்டு - வெளிப்படையாய் சொன்ன மீனா! | Meena Open Talks Crush On Bollywood Hero

இந்நிலையில், கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022-ல் காலமானார். பிரபல ஊடகம் ஒன்றிற்கு மீனா மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அதில், ரித்திக் ரோஷனை ரொம்பப் பிடிக்கும்.

அந்த போட்டோ எடுத்தப்போ என் இதயமே நொறுங்கிடுச்சு. அவருக்கு அன்னக்கி கல்யாணம். எனக்கு அப்போ கல்யாணம் ஆகல. என் அம்மா கிட்ட கூட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கம்மான்னு சொன்னேன்” என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.