பெரிய நடிகருடன் காதலில் மீனா? ரகசிய சந்திப்பு - போட்டுடைத்த பிரபலம்!
சபிதா ஜோசப், மீனா குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
நடிகருடன் காதல்?
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார். இதற்கிடையில், பிரபல அரசியல்வாதியுடன் உறவு, தனுஷுடன் மறுமணம் என்றெல்லாம் செய்திகள் பரவியது.
அதனை மறுத்து வந்தார் மீனா. இந்நிலையில், பிரபல மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், திருமணத்திற்கு முன்பே மீனாவுக்கு ஒரு பெரிய நடிகருடன் காதல் ஏற்பட்டது என்றும் சென்னையில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு என ஒரு தனியாக அறை ஒதுக்கி விடுவார்களாம்.
அந்த அறையில் இருவரும் ரகசிய சந்திப்பு நடத்துவார்களாம். ஆனால் அது காதும் காதும் வச்ச மாதிரி அப்படியே மறைந்து போனது எனத் தெரிவித்துள்ளார்.