அரசியல் பிரமுகருடன் பழக்கம்..ஆதாரம் உள்ளதா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Meena Tamil Actress
By Karthick Aug 02, 2024 04:56 AM GMT
Report

நடிகையான மீனாவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகனை சேர்த்து வைத்து சில சர்ச்சை கருத்துக்கள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

மீனா சர்ச்சை

பிரபல நடிகையான மீனா, கணவரை இழந்த நிலையில், தற்போது தான் மீண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக பல திரைத்துறை நட்சத்திரங்களும், ரசிகர்களும் பேசி வரும் சூழலில், தேவையற்ற சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

Actress Meena

அதாவது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மீனா ஆகியோரை சேர்த்து வைத்து கருத்துக்கள் சில வெளிவர துவங்கியுள்ளன. பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா, சில கருத்துக்களை பேச அது மீனா - எல்.முருகன் பக்கம் திரும்பிவிட்டது. இந்த சூழலில் தான், இது தொடர்பாக அந்தணன் பேட்டியளித்துள்ளார்.

மறுமணம் குறித்து வெளியான வதந்திகள் - ஒரே பதிலால் வாயடைத்து போகவைத்த மீனா

மறுமணம் குறித்து வெளியான வதந்திகள் - ஒரே பதிலால் வாயடைத்து போகவைத்த மீனா

அவர் பேசும் போது, எல்லா கட்சியினரையும் அவர் பேசுகிறார். ஆதாரம் இருப்பதாகவும் கூறுகிறார். அவர் தான் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறித்த ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.

ஆதாரம் இருந்த சொல்லுங்க...

அப்படி தான் இந்த செய்தி கொண்டுபோகிறார்கள். இதனை சரி தவறு என்பதை சம்மந்தப்பட்டவர்கள் மனசாட்சி தான் முடிவு பண்ணனும். இதெல்லாம் கட்டுக்கதையா? உண்மையா? என்பது மனசாட்சி தான் முடிவு செய்யணும்.

ஆதாரம் இருக்கிறதாக கூறும் திருச்சி சூர்யா, அவர் அதனை வெளியிடாமல் இருக்கிறார். அது காட்டுத்தீ போல பரவி கண்டபடி பேசுகிறார்கள். யாரையோ பழி வாங்குவதற்காக யாரையோ மாட்டிவிட்டார் என்பது போல் தான் இது உள்ளது. ஒரு பெரிய அரசியல் வாதியையும், நடிகையையும் முடிச்சி போட்டு பேசுவது என்பது இங்கு சாதரணமாக உள்ளது.

Actress Meena

ராதிகா கூட மீனாவிற்காக பரிதாபப்பட்டு பேசினார். இவளோ மோசமான குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். அதில், உண்மை இருந்து அதனை வெளிஉலகிற்கு சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை. அவ்வாறு சொல்லாமல் இருப்பது அவர்களுக்கு மேலும் மேலும் பல அவதூறுகளை சுமத்திட்டே இருக்கு. இவ்வாறு அந்தணன் அந்த வீடியோவில் பேசினார்.