எனக்கு மீனா கணவர் மரணத்தில் சந்தேகம் இருக்கு...பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி - ஷாக்கான ரசிகர்கள்

Meena Tamil Cinema Bayilvan Ranganathan
1 மாதம் முன்

நடிகை மீனா

நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

வித்யாசாகர் மரணம்

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பிரபலங்கள் இரங்கல்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நேரில் அஞ்சலி

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரியா விடை கொடுத்த மீனா

நடிகை மீனா தகன மேடையில் இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் தன் கணவரை கட்டி அணைத்த மீனா, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்தார். பின்னர், தழு, தழுத்த குரலில் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

புறாக்களின் எச்சம்

பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அந்த புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசித்ததால், வித்யாசாகருக்கு நோய் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

meena

பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

இந்நிலையில், வித்யாசாகரின் மரணம் குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், பெங்களூரில் குடும்பத்துடன் இருந்த மீனா திடீரென சென்னைக்கு வந்ததிற்கான காரணம் என்ன? வித்யாசாகர் மரணமடைந்து இவ்வளவு மணிநேரம் கழித்தும் மருத்துவமனை சார்ப்பில் அறிக்கை எதுவும் வெளியாகததிற்கு என்ன காரணம்? மீனாவும் அவரது மகள் நைனிகாவும் சினிமாவில் நடிக்க வந்தது வித்யாசாகருக்கு பிடிக்கவில்லை. இதனால், வித்யாசாகர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானரா? இது மாதிரியான நிறைய சந்தேகம் எனக்கு வருகிறது. ஆனாலும், கணவனை இழந்த மீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வர வேண்டும் என்று பேசியுள்ளார்.

ரசிகர்கள் கோபம்

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பயில்வானை வெளுத்து வாங்கியுள்ளனர். கணவனை இழந்து கொஞ்ச நாள் கூட ஆகலை. அதுக்குள்ள வாய்க்கு வந்தப்படி பேசிட்டு இருக்கீங்கன்னு திட்டி தீர்த்து வருகின்றனர். 

வித்யாசாகருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி - அங்கிள்..என கதறி அழுத மீனா..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.