ஹிந்தி விழாவா? என்னை ஏன் கூப்பிட்டிங்க? ஆவேசமான நடிகை மீனா
விழாவில் ஹிந்தியில் பேச சொன்னதற்கு நடிகை மீனா ஆவேசமடைந்துள்ளார்.
மீனா
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா. அதன் பின் ரிதம், எஜமான், சிட்டிசன், முத்து, அவ்வை சண்முகி என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா அபுதாபியில் செப்டம்பர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் இந்த விழா நடைபெற்றது.
சிறந்த பெண் சமந்தா
விழாவில் முதல் நாளான செப்டம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த தமிழ் படத்திற்கான விருது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இந்தாண்டிற்கான சிறந்த பெண் என்ற பிரிவில் நடிகை சமந்தாவிற்கு விருது வழங்கப்பட்டது.
ஹிந்தி விழாவா?
விழா குழுவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகை மீனாவை பேச அழைத்தனர். அவர் பேச ஆரம்பிக்கும் போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஹிந்தியில் பேசுங்கள் என கூறினர்.
அதை கேட்டு ஆவேசமான மீனா, இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேசணுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க? என கேள்வி எழுப்பினார்.
அதன் பின் ஆங்கிலத்தில் பேசிய அவர், "தென்னிந்தியர்கள் மட்டும்தான் இங்கே வருகிறார்கள் என்று நினைத்தேன். தென்னிந்திய மொழி படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என பேசினார்.