சளி, காய்ச்சல்; இந்த 67 மருந்துகள் தரமற்றவை - தவறிக்கூட வாங்கிடாதீங்க!

Cold Fever Government Of India West Bengal Himachal Pradesh
By Swetha Apr 25, 2024 05:43 AM GMT
Report

உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தரமற்ற மருந்துகள் 

நமக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டாலும் அல்லது சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டாலும் நாம் உடனே நாடுவது மருந்து மாத்திரைகள் தான். ஆனால் நாம் உட்கொள்ளும் பல மருந்து, மாத்திரைகள் போலி மற்றும் தரமற்றவையாக விற்பனையாகிறது என்பது நிசப்தம்.

சளி, காய்ச்சல்; இந்த 67 மருந்துகள் தரமற்றவை - தவறிக்கூட வாங்கிடாதீங்க! | Medicines For Cold And Fever Are Substandard

அந்த வகையில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 நாடுகளில் இருமல் மருந்து விற்பனைக்கு அதிரடி தடை- என்ன காரணம்?

6 நாடுகளில் இருமல் மருந்து விற்பனைக்கு அதிரடி தடை- என்ன காரணம்?

தவறிக்கூட வாங்கிடாதீங்க

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சளி, காய்ச்சல்; இந்த 67 மருந்துகள் தரமற்றவை - தவறிக்கூட வாங்கிடாதீங்க! | Medicines For Cold And Fever Are Substandard

அதில், சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உட்கொள்ளும் 67 மருந்துகள் தரமற்றவை என்று தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் இது போன்ற போலி மருந்துகள் மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும்,இந்த மருந்து ஆராய்ச்சியின் முழு விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதள (https://cdsco.gov.in) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. துமட்டுமல்ல, தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது.