6 நாடுகளில் இருமல் மருந்து விற்பனைக்கு அதிரடி தடை- என்ன காரணம்?

Africa
By Swetha Apr 15, 2024 06:44 AM GMT
Report

6 நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருமல் மருந்து தடை

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் இந்த மருந்தை பரிந்துரைந்து வந்தனர்.

6 நாடுகளில் இருமல் மருந்து விற்பனைக்கு அதிரடி தடை- என்ன காரணம்? | African Nations Ban Cough Syrup

இந்த நிலையில், இதனை தொடர்ந்து அருந்தி வந்த குழந்தைகள் பலருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதனை செய்தனர்.

இந்தியாவில் 14 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை - காரணம் என்ன?

இந்தியாவில் 14 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை - காரணம் என்ன?

அதிர்ச்சி தகவல்

அந்த இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் அதை குடிக்கும்போது உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

6 நாடுகளில் இருமல் மருந்து விற்பனைக்கு அதிரடி தடை- என்ன காரணம்? | African Nations Ban Cough Syrup

இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.