சுதந்திரமாக வாழ அனுமதிக்கவில்லை.. தந்தையை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர் - வெறிச்செயல்!
மருத்துவ மாணவர் ஒருவர் தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் சாருவிளாகம் பகுதியி வசித்து வருபவர்கள் ஜோஸ் - சுஷாமா தம்பதியினர். இவர்களுக்கு பிரிஜில் என்ற மகன் உள்ளார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ள நிலையில் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அதன்பிறகு பிரிஜில் பெற்றோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள சமையல் அறைக்குச் சென்ற ஜோசின் மனைவி சுஷாமா கதறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ஜோசின் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த ஜோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவ மாணவர்
தொடர்ந்து காவல்துறையினர் அவரது மகன்பிரிஜிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மகன் பிரிஜில் தான் தந்தையை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் தன்னை சுதந்திரமாக வாழத் தந்தை அனுமதிக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.அதனால் தான் அவரை கொலை செய்ததாக பிரிஜில் வாக்கு மூலம் அளித்தார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.