வாடகைக்கு வசித்த பெண்; குளியலறையில் பேனா - சிக்கிய டாக்டர்!
மருத்துவ மாணவர் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து சிக்கியுள்ளார்.
ஸ்பை பேனா
சென்னை, ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம்(36). இவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது வீட்டில் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.
அதன்பின், அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் நுழைந்து, குளியலறை அருகே ஸ்பை பெண் என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
சிக்கிய டாக்டர்
இந்நிலையில், அப்பெண் சந்தேகம் அடைந்து குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்தபோது அது உளவு பார்க்கும் கருவி(கேமரா) என்பது தெரியவந்தது.
உடனே, இச்சம்பவம் குறித்து அந்த தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.