டாக்டர்களுக்கு உணவு தயாரிக்க டாய்லெட் நீரை பயன்படுத்திய கொடுமை - ஷாக் வீடியோ!
கழிப்பறை நீரை உணவு தயாரிக்க பயன்படுத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிப்பறை நீர்
மத்திய பிரதேசம், ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் போது உணவு தயாரிக்க கழிப்பறையில் குழாய் நீரை பயன்படுத்திய வீடியோ வைரலானது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல பெரிய மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர். அந்த வீடியோவில், கழிவறையில் உள்ள ஜெட் ஸ்பிரேயில் பைப் பொருத்தப்பட்டு, அதன் நீரை உணவு தயாரிக்கும் ஊழியர்கள் பயன்படுத்துவதை காணலாம்.
அதிர்ச்சி வீடியோ
இந்த வீடியோவை @brut.india இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளது, “கழிவறை குழாயில் உள்ள தண்ணீர் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறதா? ஜபல்பூரில் இருந்து வைரலான இந்த வீடியோ கடுமையான எதிர்வினைகளை கிளப்பியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
जबलपुर के सरकारी मेडिकल कॉलेज में राष्ट्रीय स्तर का कॉन्फ्रेंस था, एक वीडियो वायरल हुआ जिससे ऐसा लग रहा है कि खाना शौचालय में लगे नल के पानी से बना, प्रशासन का कहना है इस पानी से सिर्फ बर्तन धुले, जांच के आदेश दिए गए हैं pic.twitter.com/gl3CP88v6r
— Anurag Dwary (@Anurag_Dwary) February 11, 2025
இந்நிலையில் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது. பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணையை நடத்துமாறு நான் டீனிடம் முறைப்படி கோரியுள்ளேன் என்று தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் சஞ்சய் மிஸ்ரா கூறியுள்ளார்.