தகாத முறையில் நடந்துக்கொண்ட மகன் - 5 துண்டுகளாக வெட்டி வீசிய தாய்!

Attempted Murder Andhra Pradesh Crime
By Sumathi Feb 15, 2025 04:30 PM GMT
Report

தாய், மகனை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகன் செய்த செயல்  

ஆந்திரா, கம்பம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி தேவி(57). இவரது மகன் ஷியாம் பிரசாத்(35). துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை.

ஷியாம் பிரசாத்

இந்நிலையில், இவர் ஐதராபாத், நரசரபேட்டை, பெங்களூரு பகுதியில் உள்ள தனது சித்தி, பெரியம்மா, அத்தை உள்பட உறவினர்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

வெறும் ரூ.389 மட்டுமே; ”வாடகைக்கு காதலன்” - அதுவும் நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா?

வெறும் ரூ.389 மட்டுமே; ”வாடகைக்கு காதலன்” - அதுவும் நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா?

தாய் வெறிச்செயல்

இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது உறவினர்களுடன் சேர்ந்து பிரசாத்தை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி கோடாரியால் மகனை வெட்டி கொலை செய்துள்ளார்.

தகாத முறையில் நடந்துக்கொண்ட மகன் - 5 துண்டுகளாக வெட்டி வீசிய தாய்! | Mother Killed Son For Indecent Behaviour Andhra

பின், உறவினர்களுடன் சேர்ந்து பிரசாத்தின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார்.

இதனையடுத்து லெட்சுமி தேவி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி, லெட்சுமி தேவியை தேடி வருகின்றனர்.