ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மருத்துவ பரிசோதனை - நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்குச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (72), பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நேற்று காலை தீடிரென ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
பரிசோதனைகள்
சில பரிசோதனைகள் செய்த பின், மீண்டும் ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார்.இது குறித்து வழக்கமான பரிசோதனைக்காக ஆளுநர் வந்து சென்றதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை தீடிரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்குச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.