பாரதம் மற்றும் இந்து தர்மத்தை என்றுமே அழிக்க முடியாது - ஆளுநர் ஆர் என் ரவி!
சனாதன தர்மம் என்பது எளிமையானது என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற ஹிந்து தர்ம வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ரவி,பாரதத்தை மிகச் சிறந்த நாடாக உயர்த்தும் நோக்கில் 40 ஆண்டுகளாக இந்தியத் தர்ம வித்தியா பீடம் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது. இவை அனைத்தும் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக அயலக ஆட்சியில் நமது தர்மத்தை அழிக்க பல்வேறு முயற்சிகளைச் செய்தார்கள் ஆனால் அவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளோம்.
நமது தர்மம் என்றுமே அழிக்க முடியாது. அதனைப் பலவீனப்படுத்த முயற்சிகள் தற்பொழுது நடைபெறுகிறது. ஆனால் அவற்றில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறினார்.
ஆர் என் ரவி
தொடர்ந்து பேசிய அவர்,''பாரதத்தின் பரிணாம வளர்ச்சியை மனிதநேய மதிப்புகளின் முதுகெலும்பாகவும், பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு மற்றும் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் பாரதம் நமது கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தில் எவ்வாறு மீண்டும் பெருமிதத்துடன் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாகக் கூறினார்.
மேலும் கடந்த ஒரு தசாப்தத்தில் நமது ஏழை மற்றும் அடித்தட்டு நடுத்தர மக்களின் வாழ்வை ஒரு விரிவான வளர்ச்சி மற்றும் மேம்பாடு சீராக முன்னேற்றி வருகிறது.
வளர்ச்சியடைந்த பாரத கட்டமைப்பில் மாணவர்கள் தங்கள் முழு தனிப்பட்ட வளர்ச்சியுடன் தங்கள் பங்களிப்பைப் பதிக்க வேண்டும் என்றும் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.